இஸ்தான்புல், ஜூன் 15- இன்று அதிகாலை இஸ்ரேலிய ராணுவம் தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தஸ்னிம் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
நோபோனியாட் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஆயுதப்படை தளவாடக் கட்டிடத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நிர்வாகக் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை காலை இஸ்ரேலிய இராணுவம் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது.
அணுசக்தி மற்றும் ஏவுகணை வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பல மூத்த ஈரானிய இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தின் பல இடங்களில் பாலிஸ்டிக் எனப்படும் நீண்டதூரம் பாயக்கூடிய உந்துவிசை ஏவுகணைகளை ஏவியது. இதன் விளைவாக உயிரிழப்புகளும் பலருக்கு காயங்களும் ஏற்பட்டன. அதே போல் கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.


