குவாந்தான், ஜூன் 15- காப்புறுதி முகவர் மற்றும் காவல்துறை அதிகாரி என கூறிக்கொண்ட தொலைபேசி அழைப்பு மோசடி கும்பலின் வலையில் சிக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் 216,067 வெள்ளியை இழந்தார்.
அறுபத்தோரு வயதான பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு அனாமதேய நபரிடமிருந்து அழைப்பு வந்ததாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
மொத்தம் 68,000 மதிப்புள்ள போலியான காப்புறுதி கோரிக்கையை அம்மாது முன்வைத்துள்ளதாக அந்த நபர் கூறியுள்ளார். பின்னர் அந்த அழைப்பு தன்னை அம்பாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபருடன் இணைக்கப்பட்டது
அந்தப் பெண் தவறான பணக்கோரிக்கையை முன்வைத்ததோடு பணமோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக அந்த அதிகாரி மிரட்டியுள்ளார் என அவர் சொன்னார்.
சில வங்கிக் கணக்குகளைத் திறந்து அனைத்து சேமிப்பு, ஓய்வூதியத் தொகை மற்றும் வங்கிக் கடன்களையும் விசாரணை நோக்கங்களுக்காக அந்த அதற்கு மாற்றுமாறு அறிவுறுத்தப் பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 20 முதல் மே 5 வரை பாதிக்கப்பட்டவர் ஆறு வெவ்வேறு கணக்குகளுக்கு 24 பணப் பரிவர்த்தனைகளைச் செய்ததாக யஹாயா கூறினார்.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகளைப் பெற்றால் பொதுமக்கள் எளிதில் பீதியடைய வேண்டாம் என்றும் தெரியாத தரப்பினருக்கு வங்கித் தகவல்களை ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


