இந்த சவால்களில் வளர்ச்சி மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள், வரையறுக்கப்பட்ட நிதி இடம் மற்றும் கட்டமைப்பு பொருளாதார மாற்றத்தின் மெதுவான வேகம் ஆகியவை அடங்கும் என்று அன்வார் கூறினார்.
"கட்டமைப்பு சீர்திருத்தங்களை துரிதப்படுத்தி, சமூக-பொருளாதார மேம்பாட்டு இடைவெளிகளைக் குறைக்கும் அதே வேளையில், உலகளாவிய பொருளாதார அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள மலேசியா அதிகம் தயார் நிலையை உருவாக்க வேண்டும்" என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மூத்த அரசு அதிகாரிகளுடன் 13 மலேசிய திட்டங்களின் தயாரிப்பு குறித்து உயர்மட்ட விவாதத்திற்கு அன்வர் தலைமை தாங்கினார்.
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கிய ஆவணத்தின் தயாரிப்பு, பரந்த அளவிலான பங்குதாரர்களிடமிருந்து முன்மொழியப்பட்ட உத்திகள் மற்றும் முன் முயற்சிகள் குறித்து கூட்டு முயற்சி மற்றும் விரிவான பின்னூட்டத்தின் விளைவாகும் என்று அவர் கூறினார்.
இந்த பங்குதாரர்களில் பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகள், உள்ளூர் அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது மக்கள் அடங்குவர்.
கடந்த மாதம், பொருளாதார அமைச்சர் ரஃபிசி ராம்லி ராஜினாமா செய்ததை தொடர்ந்து 13 மலேசிய திட்டம் குறித்து ஒரு வணிகக் குழு கவலை தெரிவித்தது.
மலேசியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கம் (சமெண்டா), திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள் தக்கவைக்கப் பட்டு முழுமையாக செயல்படுத்த படாவிட்டால் நாடு மற்றொரு பொருளாதார சுழற்சியை (2026-2030) இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தது.
பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பொருளாதார அமைச்சர் மே 28 அன்று ராஜினாமா செய்தார்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 28 வரை வரவிருக்கும் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 13MP ஐ முடிப்பதே பொருளாதார அமைச்சராக தனது இறுதி பொறுப்பு என்று பாண்டன் எம். பி. கூறினார்.


