ஆயர் குரோ, ஜூன் 13 - நாட்டின் தொழிற்கல்வி மற்றும் தொழில்பயிற்சி திவேட் அமைப்பை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நோக்கில் திவேட் ஆணையத்தை நிறுவுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய திவேட் மன்றத்தின் கீழ் திவேட் துறையின் ஊக்கமளிக்கும் சாதனைகளை தொடர்ந்து இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
ஆயர் குரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய திவேட் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய போது அன்வார் இவ்வாறு கூறினார்.
பெரிய அளவிலான பயிற்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் பல்வேறு நிறுவனங்களின் ஈடுபாட்டை ஒருங்கிணைப்பதற்கும் தேசிய திவேட் மன்றத்தின் பங்கை உயர்த்துவது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பெர்னாமா


