பேங்காக், ஜூன் 13 - இன்று தாய்லாந்தின் புக்கெட்டிலிருந்து இந்தியாவின் தலைநகர் புது டில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து குறிப்பிட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசரகால திட்டங்களின்படி, விமானம் AI379இல் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று தாய்லாந்து விமான நிலைய (AOT) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
156 பயணிகள் இருந்த விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
விமானம் இன்று காலை 9.30 மணிக்கு புக்கெட் விமான நிலையத்திலிருந்து இந்திய தலைநகருக்குப் புறப்பட்டது. பின், அந்தமான் தீவுக்கு மேலே ஒரு பெரிய வட்டமடித்த பின்னர் புக்கெட் தீவிற்கே திரும்பியது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை


