சாவ் பாவ்லோ, ஜூன் 12 - 2026 உலகக் கிண்ண போட்டிக்கான தங்களின் இடத்தை பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தன் வழி பிரேசில் உறுதி செய்தது.
புதிய பயிற்றுநர் கார்லோ அன்செலோட்டியின் கீழ் பிரேசிலுக்கான ஒரே கோலை ஆட்ட நாயகன் வினீசியஸ் ஜூனியர் ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பெற்று தந்தார்.
இதன் வழி, பிரேசில் 16 ஆட்டங்களில் இருந்து 25 புள்ளிகளுடன் தென் அமெரிக்க தகுதி மண்டலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை உலக வெற்றியாளரான இந்த அணி, ஒவ்வொரு உலகக் கிண்ண போட்டிக்கும் தகுதி பெற்ற ஒரே அணி என்ற சாதனையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
-
பெர்னாமா


