கோலாலம்பூர், ஜூன் 12- கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான சுக்குக் நிதியை மோசடி செய்தது தொடர்பில் 'டான்ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட நபர் ஒருவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) நேற்று வாக்குமூலம் பதிவு செய்தது.
எம்.ஏ.சி.சி.யின் இரண்டு விசாரணை அதிகாரிகள் தலைநகரில் உள்ள அந்த 'டான்ஸ்ரீ'யின் இல்லத்தில் இந்த வாகாகுமூலப் பதிவு நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று வட்டாரம் ஒன்று கூறியது.
இது தவிர மலாக்காவில் உள்ள 'டான்ஸ்ரீ'யின் வீட்டிலும் எம்.ஏ.சி.சி.
சோதனை நடத்தியதாகவும் எனினும், எந்த பறிமுதல் அல்லது பறிமுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வட்டாரம் தெரிவித்தது.
அந்த டான்ஸ்ரீ மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு அவரிடம் எம்.ஏ.சி.சி. வாக்கு மூலம் பெறும் என்று ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒருவருக்குச் சொந்தமானது என்று நம்பப்படும், கைப்பைகள், நகைகள், சொகுசு வாகனங்கள், கைக்கடிகாரங்கள், பணம் மற்றும் ஒரு சொகுசு வீடு உள்பட சுமார் 3.2 கோடி வெள்ளி மதிப்புள்ள
பல்வேறு சொத்துக்களை எம்.ஏ.சி.சி. பறிமுதல் செய்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.


