குவாந்தான், ஜூன் 10 - நேற்று மாலை 5 மணியளவில், தெமெர்லோ மாவட்டத்தில் கடும் புயல் ஏற்பட்டது. அதில் மொத்தம் 75 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இப்பேரிடரில், முக்கிம் பேராக் 2-இல் 74 வீடுகளும், மெந்தகாப் 2-இல் ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெமெர்லோ மாவட்டப் பேரிடர் மேலாண்மைத் துறை (UPBD) செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை. தற்காலிக தங்கும் மையம் எதுவும் இன்னும் திறக்கப்படவில்லை என்று தெமெர்லோ மாவட்டப் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளைத் தவிர, மரங்கள் விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்ததோடு, பள்ளி கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களும் சேதமடைந்து குறிப்பிடத்தக்கது.


