ஜெர்மனி, ஜூன் 10 - UEFA நாடுகளுக்கு இடையிலான லீக் கிண்ணத்தை ஸ்பெய்னை தோற்கடித்து போர்த்துகல் கைப்பற்றியுள்ளது. இந்த கிண்ணத்தை போர்த்துகல் இரண்டாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 5-3 எனும் கோல் கணக்கில் பினால்டி வழி ஸ்பெய்னை தோற்கடித்து போர்த்துகல் வாகை சூடியது.
மேலும், போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஸ்பெய்னின் லமின் யமாய் ஆகிய இருவரின் விறுவிறுப்பான ஆட்டத்திற்காகவே இந்த இறுதிப் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இரு நாடுகளும் முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் தலா இரு கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தன.
அதனால், வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பினால்டிக்கு சென்றது. அதில் போர்த்துகல் 5-3 எனும் கோல் கணக்கில் லீக் கிண்ணத்தை வென்றது.
இந்த ஆட்டத்தில், கோல் மன்னன் ரொனால்டோ அனைத்துலக அரங்கில் தமது 138வது கோலை அடித்தார்.
-- பெர்னாமா


