கோலாலம்பூர், ஜூன் 10 - நேற்று அதிகாலை, ஜாலான் கிள்ளான் லாமாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து, செபுத்தே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு மொத்தம் 27 தீயணைப்பு வீரர்கள் விரைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தலைவர் ஆர்ம்டன் மஹட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை அதிகாலை 3 மணிக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்றும் தீயணைப்பு, கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு இயக்க பணிகளை தொடர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


