சுபாங் ஜெயா, ஜூன் 9: ஜூன் 14 அன்று தாமான் புஞ்சாக் ஜலீலில், சுபாங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள பயன்படுத்தப்பட்ட மின் பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சேகரிப்பு திட்டத்தில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப் படுகிறார்கள்.
2 முதல் 5 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு வரும் முதல் 100 பங்கேற்பாளர்களுக்கு நெஸ்லேவிலிருந்து ஒரு சிறப்பு பரிசை பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று சுபாங் ஜெயா மாநகராட்சி அதன் முகநூலில் தெரிவித்தது.
நெஸ்லே மலேசியா மற்றும் KPT மறுசுழற்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இத்திட்டம் தாபக் பெஞ்சாஜா PUJ 3/10இல் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
“மறுசுழற்சி முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தற்போது அப்பகுதியில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசுழற்சி சேகரிப்பை ஊக்குவிப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதல் தகவல்களை இந்த இணைப்பின் மூலம் பெறலாம் https://qr.me-qr.com/mobile/pdf/7275aba4-b2f6-4146-b881-0ebd50fd6e70.


