ANTARABANGSA

விசா இடையூறு இல்லாமல் 'ஹார்வர்ட்' பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடரலாம்

9 ஜூன் 2025, 3:30 PM
விசா இடையூறு இல்லாமல் 'ஹார்வர்ட்' பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடரலாம்

கோலாலம்பூர், ஜூன் 9 - அண்மையில், அமெரிக்க 'ஹார்வர்ட்' பல்கலைக்கழகத்தில் புதிய சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதை தடுக்கும் விதத்தில், அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்திருந்தது. தற்போது நீதிமன்றம் அவ்விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம், மலேசிய மாணவர்கள் உட்பட சுமார் 6,800 சர்வதேச மாணவர்கள், விசா இடையூறு இல்லாமல் தங்கள் படிப்பைத் தொடர இயலும் என்று மலேசிய உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி, அமெரிக்க 'ஹார்வர்ட்' பல்கலைக்கழகத்தில், 54 மலேசிய மாணவர்களில் 16 மாணவர்கள் நிதியுதவி பெற்றும், 38 மாணவர்கள் சொந்த செலவிலும் மேற்கல்வியைத் தொடர்ந்து வருகின்றார்கள்.

மேலும், மலேசிய உயர்கல்வி அமைச்சும், வாஷிங்டனிலிருக்கும் மலேசிய உயர்க்கல்வி அலுவலகமும் (EMWDC) மலேசிய மாணவர்களின் நலன், எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்பதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.