கோலாலம்பூர், ஜூன் 9 - பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவன்-மனைவிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
பிரதமர் அன்வாரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் பவுஸி, குவாந்தான், பண்டார் இண்ட்ரா மக்கோத்தாவில் உள்ள தம்பதியினரின் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த உதவியை வழங்கினார்.
கணவரும் மனைவியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் இருவரும் படுக்கையில் உள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினரின் கவனிப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. படுக்கையில் இருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் பொறுமையும் எங்கள் அனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் இருந்தது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பாக அன்பு, தெரிவித்துக் கொள்வதோடு நிதியுதவியும் அளிக்கிறேன் என்று அகமது ஃபர்ஹான் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மேலும், அவர்களை உண்மையாகக் கவனித்துக் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்காகவும் அவர்கள் விரைந்து குணமடைவதற்காகவும் பிரார்த்தனை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.


