கோலாலம்பூர், ஜூன் 6 - மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மே 23 அன்று தொலைபேசி மூலம் ஒரு குழந்தையின் தாயான நூர் ஃபாத்திஹா மீடியா சிலாங்கூர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
மருந்துக் கடை ஒன்றில் பணிபுரியும் நூர் ஃபாத்திஹா செயலற்ற புகைப்பிடிப்பவர் (புகைப்பிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர்கள்) என உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளி ஆவார்.
செயலற்ற புகைப்பிடிப்பவர் என உறுதி செய்யப்பட்டதற்கு முன் அவர் தன்னுடைய மார்பை கனமாக உணர்ந்த நிலையில் தொண்டை அடைப்பது போல் இருந்துள்ளது. அதே நேரத்தில் ஆக்ஸிஜனை சுவாசிக்க முயற்சித்தபோது அதிக வலியை தந்துள்ளது.
இதனால், 2017 மற்றும் 2019 இல் என அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருடைய நுரையீரல் நான்கு முறை துளைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்ட தருணத்தை நினைவு கூர்ந்து அதை ஒரு திகிலூட்டும் அனுபவமாகக் கருதினார்.
ஐந்து வயதிலிருந்தே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அவர் இந்நிலையை சாதாரணமாக நினைத்துள்ளார். இருப்பினும், 2017இல் ஏற்பட்ட அறிகுறிகள் சற்று வித்தியாசமாக உணர்ந்துள்ளார். அது மிகவும் கொடுமையானது என்று அவர் விவரித்தார்.
அவருடைய நுரையீரல் அழுக்கு காற்றால் நிரம்பியிருப்பதை மருத்துவ முடிவுகள் காட்டின. தற்போது 25 வயதுடைய அவர் திரங்கானுவில் பிறந்தவர் ஆவார். தனது அன்றாட வாழ்க்கை அதிக புகைப்பிடிப்பவர்களின் குழுவால் சூழப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நுரையீரலில் ஒரு நீண்ட கம்பி செருகப்பட்டது. அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், ஒரு சிறிய கத்தியால் குத்துவது போல் உணர்ந்தார். மெதுவாக, ஒரு கம்பி அவரின் உடலில் நுழைவது போல் உணர்ந்துள்ளார். அது அதிக வலியாக இருந்ததாக தெரிவித்தார்.
“நுரையீரலில் இணைக்கப்பட்ட கம்பியை வெளியே எடுத்தபோது அது மிகவும் வேதனையாக இருந்தது, அதனால்தான் நுரையீரலை இரண்டாவது முறையாக செருக வேண்டியிருந்தது. கம்பியில் காற்று குமிழ்கள் இருந்தால், நுரையீரலை மாசுபடுத்தும் மோசமான காற்று இருப்பது தெரிய வந்தது,” என்று அவர் சொன்னார்.
அதிகமாக புகைபிடிப்பவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சித்த போதிலும், நூர் ஃபாத்திஹா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த முறை நிலைமை மோசமாக இருந்தது. அவருடைய நுரையீரலில் தண்ணீர் இருந்தது.
2019இல் நடந்த இரண்டாவது அனுபவத்திற்குப் பிறகு அதிகமாக புகைபிடிப்பவர்களுக்கு அருகில் கூட செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
மேலும், சிகரெட் புகையிலிருந்து விலகி இருக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தினார். மருத்துவமனையில் அவரது புகைப்படம் டிக்டோக்கில் பதிவேற்றப்பட்டு வைரலானது. அதுமட்டுமில்லாம்ல், தனது குழந்தையும் இரண்டாம் நிலை சிகரெட் புகையால் பாதிக்கப்படுவதை நூர் ஃபாத்திஹா விரும்பவில்லை.
"புகைபிடிப்பதை நிறுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்துவது கடினம். சிலர் புகைபிடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் புகைபிடிக்கத் தொடங்குகிறார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தை நேசித்தால், புகைபிடிப்பதை நிறுத்துங்கள் என அவர் புகைப்பிடிப்பவர்களை கேட்டுகொண்டார். இதனால், அவர்கள் மட்டும் நோய்வாய்ப்படுவதில்லை, அப்பாவி குடும்ப உறுப்பினர்களும் தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்," என அவர் கூறி வருத்தப்படார்.
செயலற்ற புகைப்பிடிப்பவர்களில் சுமார் 30 சதவீதப் பேர் மாரடைப்பு மற்றும் 25 சதவீதப் பேர் புற்றுநோய் அபாயத்தில் உள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


