(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 7- கோத்தா கெமுனிங் தொகுதி தகுதி உள்ள குடியிருப்பாளர்களுக்கு
இலவச இரத்த பரிசோதனை இயக்கத்தை நடத்துகிறது.
இந்த பரிசோதனைக்கு வரும் ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஜாலான் கெமுனிங் டாமாய் 32/151, புக்கிட் ரிமாவ் எனும் முகவரியிலுள்ள எம்.பி.எஸ் ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் நடைபெறும்.
இந்த இரத்தப் பரிசோதனை இயக்கத்தில் கீழ்க்கண்ட சோதனைகள் நடத்தப்படும்.
முழு இரத்த அணு எண்ணிக்கை
UFEME (முழுமையான சிறுநீர் பரிசோதனை)
குளுக்கோஸ் (இரத்தததில் சர்க்கரை அளவு)
கல்லீரல் விவரக் குறிப்பு (கல்லீரல் இயக்கம்)
லிப்பிட் விபரக்குறிப்பு (கொலஸ்ட்ரால்)
சிறுநீரக விவரக் குறிப்பு (சிறுநீரக இயக்கம்)
இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்குபெற இப்போதே பதிவு செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேல் விபரங்களுக்கு 03-5131 0707 / 014-750 6339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்ய போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.


