இருபத்தைந்து மற்றும் 27 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகளான அவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1) வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று தடுத்து வைக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.
அந்த பாலகனின் தந்தை உள்ளூர்வாசி என்பதும் தாயாரான இந்தோனேசிய பிரஜையை மணந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
உயரமான இடத்திலிருந்து விழுந்ததன் விளைவாக பல்வேறு காயங்களுக்கு ஆளான அச்சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்திற்கு காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு பால்கனியில் இருந்து சிறுவன் விழுந்து இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து காலை 11.17 மணிக்கு காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்த சிறுவனின் உடல் சவ பரிசோதனைக்காக சான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.


