ஸ்டோக்ஹோல்ம், ஜூன் 6 - புதன்கிழமை அரசாங்கம் அறிவித்த உடன்பாட்டின் கீழ், 600 குற்றவாளிகளை எஸ்தோனியாவில் சிறைத்தண்டனை அனுபவிக்க சுவிடன் அனுப்பி வைக்கும்.
நாட்டில் அதிகரித்து வரும் நெரிசல் மிக்க சிறைச்சாலைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியாக சுவிடனின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல், கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் தண்டனை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை எஸ்தோனிய நகரமான தார்ட்டுவில் உள்ள சிறைக்கு சுவிடன் அனுப்ப முடியும். இந்த உடன்பாட்டை சுவிடன் மற்றும் எஸ்தோனிய ஆகிய இரு நாடாளுமன்றங்களும் அங்கீகரிக்க வேண்டும்.
முழு சிறைச்சாலையும் சுவிடன் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்று சுவிடன் நீதித்துறை அமைச்சர் கன்னர் ஸ்ட்ரோமர் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்காக சுவிடன் ஒரு கைதிக்கு மாதத்திற்கு 8,500 யூரோக்கள் அல்லது 41,089 ரிங்கிட் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டது.


