ஜோர்ஜ்டவுன், ஜூன் 6 - நேற்று, ஜாலான் பத்து காவான் P149-இல், சாலை சேதச் சம்பவம் தொடர்பில் புகார்கள் வந்துள்ளதாக மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் தலைவர் சைரில் கீர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், தற்போதுள்ள சாலைக்கும் புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கும் இடையிலான சந்திப்பில் இந்த சேதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய, பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான விசாரணை நடந்து வருகிறது.
மேலும், அப்பகுதியில் விபத்துகளைத் தடுக்க 'சீரற்ற சாலை' எச்சரிக்கை பலகைகளை நிறுவுவதன் மூலம் PDC உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் சரிவு ஏற்படாதவாறு வலுவான சாலை நிலைத்தன்மையை உறுதி செய்வதையும், பழுதுபார்க்கும் செலவுகள் முழுவதையும் ஒப்பந்ததாரார்கள் ஏற்பார்கள் என்பதை ஜோஹாரி அறிவித்துள்ளார்.


