கோத்தா பாரு, ஜூன் 6 - பாசீர் பூத்தே மாவட்டத்தை உள்ளடக்கிய பிரதான கூட்டரசு சாலையின் பல நுழைவாயில்களில் இன்று காலை 9.00 மணி வரை போக்குவரத்து சீராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோக் பாலி-கோல பெசுட் நுழைவாயில் உட்பட பாசீர் பூத்தே-திரங்கானு எல்லையில் நுழையும் மற்றும் வெளியேறும் சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜெய்சுல் ரிசால் ஜக்காரியா தெரிவித்தார்.
இதுவரை கிளந்தான்-திரங்கானு எல்லை நுழைவாயிலில் வாகன நெரிசல் காணப்படவில்லை. வாகனங்கள் வழக்கம் போல் சீராக நகர்கின்றன என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு தலைநகரைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதைத் தொடர்ந்து பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


