ALAM SEKITAR & CUACA

ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும்

6 ஜூன் 2025, 1:01 PM
ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும்

ஷா ஆலம், ஜூன் 6: ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும் என முன் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர், ஜோகூர், பேராக், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நாளை காலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, புத்ராஜெயா, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களீல் பிற்பகலில் வெயிலாக இருக்கும் என முகநூலில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் 8 ஆம் தேதி, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், லாபுவான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வானிலை வெப்பமாக இருக்கும் என்று வானிலை முன் அறிவித்துள்ளது.

அதே நாளில் பிற்பகலில், பேராக், ஜோகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹரி ராயா ஐடிலாடா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக உதவும் வகையில் சிறப்பு வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெற, www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ மெட்மலேசியா வலைத்தளத்தைப் நாடுமாறு பொதுமக்கள் எப்போதும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.