புத்ராஜெயா, ஜூன் 6 - தற்போது இணையம் வழி மேற்கொள்ளப்படும் மின்னியல் சிகரெட் மற்றும் வேப் விற்பனைகளைக் கண்காணிக்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு, குறிப்பாக இளம் வயதினருக்கு தீங்கு விளைவிக்கும் பல வேப் விற்பனை நடவடிக்கைகள் இணையம் வழி தற்போது நடந்து வருவதாக தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் பொருட்டு வேப் விற்பனை குறித்த முழு அறிக்கையை எம்.சி.எம்.சி மூலம் அமைச்சு தயாரிக்கும் என்று டத்தோ ஃபஹ்மி கூறினார்.
நாடு முழுவதும் வேப் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டாலும், அது சுகாதார அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் என்று ஃபஹ்மி கூறினார்.
கடந்த வியாழக்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
--பெர்னாமா


