கிள்ளான், ஜூன் 6 - தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து அங்காடிக் கடைகள் மற்றும் விற்பனை முகப்பிடங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களை உதவியாளர்களாகப் பணியமர்த்துவதற்கான தடையை மீறும் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி கே.) மாநகர் மன்றம் தயங்காது.
எடுக்கப்படும் நடவடிக்கைகளில் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களின் ஒப்பந்தததை ரத்து செய்வதும் அடங்கும் என்று கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேன் கூறினார்.
கிள்ளானிலுள்ள 800க்கும் மேற்பட்ட கடைகள் வெளிநாட்டினரால் நிர்வகிக்கப்படாமல் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும்.
இந்த அமலாக்கம் மாநகர் மன்றத்திற்கு சொந்தமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என அவர் சொன்னார்.
சிறிய மூலதனத்துடன் தொழில் தொடங்குபவர்களுக்கு உதவுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். நாங்கள் குறைந்த வாடகை வசூலிக்கிறோம். அவர்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டால் பெரிய கடை அல்லது உணவக வளாகங்களில் வணிகத்தை நடத்த வேண்டும். அதனால்தான் உள்ளூர் குடிமக்களுக்கு உதவ வெளிநாட்டு தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கான தடையை நாங்கள் அமல்படுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றம் கடநத ஜூன் 1ஆம தேதி முதல் தனது நிர்வாகப் பகுதியில் உள்ள அனைத்து அங்காடிக் கடைகளிலும் வெளிநாட்டு தொழிலாளர்களை உதவியாளர்களாக பணியமர்த்துவதற்கு தடை விதித்துள்ளது.


