புது டெல்லி, ஜூன் 5 - எதிர்வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்கள் இந்தியாவில் உருவாக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
மேலும், 2014இல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளன.
விமானங்களைப் பராமரிப்பது, பழுதுபார்ப்பது என இந்தியாவை உலகின் முக்கிய மையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்துவரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பெர்னாமா


