ஷா ஆலம், ஜூன் 5 - சிலாங்கூரில் உள்ள புஞ்சாக் ஆலமில் வசித்து வரும் திரு. ரகுலன் மற்றும் திருமதி. வள்ளியம்மாவின் குடும்பத்தினர் தற்போது ஒரு பெரிய நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களின் மகன் கீர்த்திஷு ஒரு விபத்தில் சிக்கி, தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உடல் செயல்பாடு குறைந்துள்ளது. இப்போது அந்த குடும்பம் அவர்களுடைய மகன் சுயமாக இயங்க முடியாமல் படுக்கையில் இருப்பதால் பெரிய சுமைக்கு உட்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பிறகு, அவர்களின் முழு வாழ்க்கையும் மாறிவிட்டது.
தன் மகனை முழு நேரம் கவனித்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் திருமதி வள்ளியம்மா தற்போது இல்லத்தரசியாக உள்ளார். அவரின் கணவர் குடும்பத்திற்காக வருமானத்தை ஈட்ட லாலா மூவ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இந்த சம்பவத்தை அறிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் பவுசி அக்குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டு அக்குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கிலான ரொக்க நிதியுதவி வழங்கி. அவர் அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
அவர் அக்குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டு தற்போது வாழ்க்கையில் ஒரு பெரிய சோதனையை எதிர்கொண்டுள்ள இவர்களின் மகன் , விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.அவர்கள் மன உறுதியுடன் இருக்க அத்தம்பதியினருக்கு ஆறுதல் கூறியதாக சொன்னார்.


