கோலாலம்பூர், ஜூன் 5 - சுங்கை பீசி நெடுஞ்சாலையில் (பெஸ்ராயா) அட்டவணையிடப்பட்ட சாலை பராமரிப்பு பணிகளை பெஸ்ராயா (ம) சென். பெர்ஹாட் நிறுவனம் ஜூன் 3 முதல் நவம்பர் 30 வரை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகள் 0.1 கி.மீ. முதல் 21.9 கி.மீ.வரையிலும் B0.0 கி.மீ. முதல் B0.8 கி.மீ. வரையிலும் கி.மீ. S0.0 முதல் கி மீ. S2.2 வரையிலும் மற்றும் கி.மீ. P0.0 முதல் கி.மீ. P3.3 வரையிலும் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
நெடுஞ்சாலையின் இரு திசைகளையும் உள்ளடக்கிய தடங்களை மூடும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும்.
தார் போடுதல் மற்றும் சாலை அடையாளங்களை இடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பராமரிப்புப் பணிகள் ஒவ்வொரு நாளும் இரவு 10.00 மணி முதல் காலை 6.00
மணி வரை இரவில் மட்டுமே நடைபெறும்.
சம்பந்தப்பட்ட இடங்களில் பாதை மூடல் உள்ளிட்ட போக்குவரத்துத் தகவல்களை நெடுஞ்சாலையில் உள்ள மின்னணு அறிவிப்பு சாதனங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படுவதையும் பெஸ்ராயா உறுதி செய்யும்.
நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் அறிவிப்பு சாதனங்களில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாகனமோட்டிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் ஆதரவுடன் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை பயனர்களுக்கு ஏற்பட்ட ஏதேனும் சிரமத்திற்கு பெஸ்ரயா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. எந்தவொரு கூடுதல் தகவல்களுக்கு 1-800-88-0999 என்ற பெஸ்லைன் வழியாக தொடர்பு கொள்ளலாம்.


