கோலாலம்பூர், ஜூன் 5 - தென் கொரியவின் புதிய அதிபராக லீ ஜே-மியுங் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
வர்த்தகம், தொழில்நுட்பம், மக்களுக்கு இடையிலான நீடித்த உறவுகள், அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்த லீயுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வரவேற்பதாகவும் அன்வார் கூறினார்.
ஜனநாயக மீள்தன்மை, பின்னடைவில் தீவிரமான மற்றும் நுணுக்கமான போட்டிகளின் மூலம் வெளிவந்த தென் கொரியாவுக்கு இந்நியமனம் ஒரு திருப்புமுனையாகும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நவம்பரில் மலேசியா மற்றும் தென் கொரியாவின் லட்சியங்களை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இரு நாடுகளின் உறவுகள், வியூக பகிர்வுக்கு மேம்படுத்தப்பட்டன.
அதுமட்டுமில்லாம்ல், தற்போது தென் கொரியா ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு, APEC-க்கு தலைமையேற்றுள்ளது. ஆசியான் மற்றும் APEC தலைவராக இருக்கும் இரு நாடுகளும் வட்டார முயற்சிகளை வழிநடத்துவதில் தகுந்த நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெர்னாமா


