பச்சோக், ஜூன் 5 - கடந்த திங்கட்கிழமை, பாச்சோக் கம்போங் கெமாசினில், இதுவரை 16 ஆண்டுகளில் வரலாறு காணாத புயல் தாக்கப்பட்டு, மரங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால், அருகாமையில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர், அங்குள்ள பொதுமக்களை அதாவது 700க்கும் மேற்பட்டவர்கள் தங்கக்கூடிய தன்னுடைய 'ரிசார்ட்டில் தஞ்சம் புகுமாறு கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில், உயிர்சேதம் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை. ஆனால், மரங்கள் கீழே சரிந்து விழுந்ததால் வாகனங்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை, புயலின் தாக்கத்தால் ஒருவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டது. மேலும், 70,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


