வாஷிங்டன், ஜூன் 5 - பன்னிரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். வெளிநாட்டு பயங்கரவாதிகள்" மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை தேவை என அவர் கூறினார்.
தடை விதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைத்தி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகியவையும் அடங்கும்.
பகுதி தடைவிதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய உள்ளன என்று சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறியது.
எங்களுக்கு தீங்கு செய்ய விரும்பும் மக்களை எங்கள் நாட்டிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.
இந்த பட்டியல் திருத்தப்படலாம் மற்றும் புதிய நாடுகளைச் சேர்க்கப்படலாம் என்றும் அவர் கூறினார். இந்தப் பிரகடனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வருகிறது.
மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நாடுகள் "பெரிய அளவிலான பயங்கரவாதிகளின் இருப்பை" நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளதோடு விசா பாதுகாப்பில் ஒத்துழைக்கத் தவறிவிட்டன.
மேலும் பயணிகளின் அடையாளங்களைச் சரிபார்க்க இயலாமை, குற்றவியல் வரலாறு தொடர்பில் போதுமான பதிவுகளை வைத்திராதது, மற்றும் அமெரிக்காவில் விசா காலாவதியான நிலையில் தங்கியது ஆகியும் இதில் அடங்கும் என்று டிரம்ப் கூறினார்.


