ஜோர்ஜ்டவுன், ஜூன் 5 - பினாங்கு, ஜோர்ஜ்டவுனைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் ஒன்றின் நிர்வாகி இணைய மோசடியில் சிக்கி 1.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்துள்ளார்.
46 வயதான அவ்வாடவர், இன்ஸ்டகிராமில் உள்ள விளம்பரத்தால் கவரப்பட்டுள்ளார்.
அதன் மூலம் ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி, அவரின் பேச்சால் பங்கு முதலீட்டில் ஈடுபட அவ்வாடவர் ஆர்வம் காட்டியுள்ளார்.
இந்த முதலீட்டில் கணிசமாக இலாபம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து 'TPG PRO' எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் இறுதியில் 20 முறைகள் 4 வங்கிக் கணக்குகளுக்கு 1.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பணத்தை அனுப்பியுள்ளார்.
சொல்லியபடி இலாபத் தொகையைத் தராமல் தம்மை இழுத்தடித்தோடு, மேலும் பணம் கட்டினால்தான் கமிஷன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
எனவே, தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்த அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

