ஜோர்ஜ் டவுன், ஜூன் 5 - தெனாகா நேஷனல் நிறுவனத்தின் (.டி.என்.பி.)
நிறுவனத்தின் மின் இணைப்பு கம்பிகளை (கேபிள்) திருட ஆடவன்
ஒருவன் மேற்கொண்ட முயற்சி போலீசாரின் வருகையால் தோல்வியில்
முடிந்தது.
எனினும், தனது பிக்கப் வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்ப முயன்ற
அந்த ஆடவனை போலீசார் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு
துரத்திச் சென்றனர். அந்த வாகனம் கட்டுபாட்டை இழந்த கால்வாயில்
விழுந்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தலைமறைவானான்.
இங்குள்ள தாமான் நுசான்தாரா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்
அதிகாலை 3.44 மணியளவில் கேபிள் திருட்டு நிகழ்வது குறித்து
தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமது கூறினார்.
போலீசாரின் பிடியிலிருந்து தப்பும் நோக்கில் அந்த சந்தேக நபர் ஜாலான்
லிம் சோங் இயூ நோக்கி தனது வாகனத்தைச் செலுத்தினான். சந்தேக
நபரன் காரை துரத்தினர்.
போலீசாரின் உத்தரவை மீறி தொடர்ந்து நிற்கால் சென்ற அந்த வாகனம்
கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணி, பீடோங் பெர்மாத்தா ஹில் பார்க்
அருகே கால்வாயில் விழுந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அந்த பிக்கப் வாகனத்தின் பின்புறம் கேபிள் வெட்டும் சாதனம் மற்றும்
வெட்டப்பட்ட சில கேபிள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்
சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


