NATIONAL

தரவுகளை மாற்றியதாக 743  குற்றச்சாட்டுகள் - நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார் முன்னாள் ஆஸ்ட்டோ பணியாளர்

5 ஜூன் 2025, 10:05 AM
தரவுகளை மாற்றியதாக 743  குற்றச்சாட்டுகள் - நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார் முன்னாள் ஆஸ்ட்டோ பணியாளர்

கோலாலம்பூர், ஜூன் 5 - அங்கீகாரம் இல்லாமல் வழக்கமான வாடிக்கையாளர் கணக்குகளை வர்த்தக கணக்குகளாக மாற்றுவதன் மூலம் நிறுவனத்தின் தரவுத்தள அமைப்பை மாற்றியமைத்ததாகக் கட்டண தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

முன்னாள்  ஆஸ்ட்ரோ பணியாளரான  நோரா இடாயு ஜாஃபர்  (வயது 48)  தனக்கெதிரான 30வது குற்றச்சாட்டை நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்  நீதிபதி நார்மா இஸ்மாயில் முன் வாசித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீதான மீதமுள்ள 713 குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான  நடவடிக்கைகளை ஜூன் 26 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

மேலும், வழக்கு முடியும் வரை அவரது அனைத்துலக  கடப்பிதழை  நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,  மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000  வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

முதல் 30 குற்றச்சாட்டுகளுக்கு, வணிக துணைப் பிரிவில் பணிபுரிந்த நோரா இடாயு, தனது இந்த நடவடிக்கை   தரவுத்தள உள்ளடக்கங்களில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே வழக்கமான வாடிக்கையாளர் கணக்குகளை வர்த்தக  கணக்குகளாக மாற்றுவதன் மூலம் தரவுகழை மாற்றியமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

ஜாலான் துன் ரசாக்கில் உள்ள மெனாரா ஐகானில் உள்ள ஆஸ்ட்ரோ அலுவலகத்தில் அவர் இக்குற்றங்களைப் புரிந்ததாக அவர் குறாறச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 100,000 வெள்ளி அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 1997 ஆம் ஆண்டு கணினி குற்றச் சட்டத்தின்  5(1) பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

துணை அரசு வழக்கறிஞர் ரோஹைசா அப்துல் ரஹ்மான் வழக்கை  நடத்திய வேளையில்  குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக  வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.