குவாந்தான், ஜூன் 3 - குவாந்தானைச் சார்ந்த செவிலியர் ஒருவர் முகநூலில் வெளியான போலி முதலீடு திட்டத்தால் 107,810 ரிங்கிட் தொகையை இழந்துள்ளார்.
350 ரிங்கிட் பணத்தை முதலீடு செய்தால், 12,000 ரிங்கிட் வரை இலாபம் கிடைக்கும் என்று 'IQ Option' என்ற பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகத்தில் வளம் வந்த அப்போலி கும்பல் உறுதியளித்துள்ளதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி, 107,810 ரிங்கிட்டை முதலீடு பணமாக செலுத்திய அந்த செவிலியர் எந்தவொரு இலாபமும் கிடைக்காத போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக யஹாயா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடும், பொதுமக்கள் இத்தகைய மோசடிக்கு ஆளாகாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

