புது டெல்லி, ஜூன் 3 - இந்தியாவில் கோவிட்-19 நோய் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,961ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 203 புதியச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதே வேளையில் இந்த 2 நாட்களில் நால்வர் பலியாயினர். புது டெல்லி, தமிழகம், கேரளா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் தலா 1 மரணம் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 32 பேராக அதிகரித்துள்ளது.
தற்போது கர்நாடகாவில் புதிதாக 15 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


