கோலாலம்பூர், ஜூன் 3 - இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இரு நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம், சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான சாதனைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் மற்றும் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை குறித்த விளக்கங்களைக் கேட்டறிந்தார்.
பிரதமர் துறை (சட்டம் மற்றும் அமைப்பு சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் சட்ட சீர்திருத்தங்கள் குறித்த விளக்கத்தை மன்னரிடம் வழங்கியதாக சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் உள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு தலைமை கணக்காய்வாளர் டத்தோஸ்ரீ வான் சுரையா வான் முகமட் ராட்ஸி 2025/2 ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை மாட்சிமை தங்கிய பேரரசரிடம் வழங்கினார்.
ஒவ்வொரு விளக்கமளிப்பு நிகழ்வும் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.


