NATIONAL

அமானா இக்தியாரின் 'பெண்' திட்டத்திற்கான மானியம் வெ.10 கோடியாக அதிகரிப்பு

3 ஜூன் 2025, 4:40 PM
அமானா இக்தியாரின் 'பெண்' திட்டத்திற்கான மானியம் வெ.10 கோடியாக அதிகரிப்பு
அமானா இக்தியாரின் 'பெண்' திட்டத்திற்கான மானியம் வெ.10 கோடியாக அதிகரிப்பு

சுங்கை பூலோ , ஜூன் 3 - அமானா இக்தியாரின் பெண் எனும் புதிய திட்டத்திற்கு பத்து கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் இன்று அறிவித்தார்.

இதற்கு முன்னர் 'பெண்' திட்டத்திற்கு ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்போது இந்திய பெண் தொழில் முனைவர்களுக்காக பத்து கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இக்கூடுதல் நிதி மலேசியா மடாணி கொள்கைக்கு ஏற்ப, பெண் (வளப்பம், ஆளுமை, புதிய வழமை) எனும் புதிய திட்டத்தின் வழி வியாபாரக் கடனுதவியாக பகிர்ந்தளிக்கப்படும்.

இதன் வழி, இந்திய பெண் தொழில்முனைவோரை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவர்களின் சுய முன்னேற்றத்திற்கு வழிகோலும் இன்னொரு புதுமை முயற்சிதான் இது என டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார். இன்று பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் அமைந்துள்ள ஏ.ஐ.எம். தலைமையகத்தில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் விழாவில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பெண் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.

இதுவரை 6,247 பெண் தொழில் முனைவோருக்கு 4 கோடியே 27 லட்சத்து 25,640 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

6,247 பெண் தொழில் முனைவோரில் 1,062 பேர் புதிய தொழில் முனைவோர் ஆவார் என்று அவர் தமது உரையில் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற வரலாற்றுப்பூர்வ கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு நிகழ்ச்சியில் அமானா இக்தியார் தலைமை நிர்வாகி டத்தோ ஷாமிர் அஜிஸ், தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.