சிரம்பான், ஜூன் 3 - நேற்று அதிகாலையில், தாமான் புக்கிட் ஸ்ரீ செனாவாங்கிலிருக்கும் ஆடவர் ஒருவரின் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய 'தோயோட்டா வியோஸ்' மற்றும் 'பெரோடுவா மைவி' ஆகிய இரண்டு வாகனங்கள், 'புரோட்டான் பெர்சோனா' வாகனம் ஒன்றால் மோதப்பட்டு படும் சேதமடைந்துள்ளன.
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 22 வயது ஆடவன், எதிர்தரப்பில் வேகமாக வந்த வாகனம் ஒன்று தன்னுடைய வாகனத்தை மோதிவிடும் என்ற அச்சத்தில் தனது பாதையை விட்டு சற்றே விலகி சென்றுள்ளார். அந்நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவ்விரு வாகனங்களையும் மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சிரம்பான் துணை மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது அம்ருல் யாசிட் அனுவார் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தங்களுடைய புகார்களை காவல் துறையினரிடம் அளித்துள்ள நிலையில் இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


