புத்ராஜெயா, ஜூன் 3 - கடந்தாண்டு கடல் மீன்பிடி நடவடிக்கைகள் வழி
கடல்சார் உணவு உற்பத்தி அபரிமித வளர்ச்சி கண்டு 14 லட்சத்து 20
ஆயிரம் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது.
அவற்றில் 510,315 மெட்ரிக் டன் கடல் மீன்பிடி நடவடிக்கைகள்
வாயிலாகவும் 7,497 மெட்ரிக் டன் தரை மீன் பிடி நடவடிக்கைகள்
வாயிலாகவும் பெறப்பட்டதாக மலேசிய மீன்பிடித் துறை அறிக்கை
ஒன்றில் கூறியது.
மொத்தம் 179 கோடி வெள்ளி மதிப்புள்ள 19 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக்
டன் உற்பத்தியை பதிவு செய்ததன் மூலம் மீன்பிடித் துறை மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 0.7 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கியதாக அது
குறிப்பிட்டது.
மலேசியர்களின் சராசரி மீன் பயனீடு ஆண்டுக்கு 44.7 கிலோகிராமாக
உள்ளது. இது உலகளாவிய சராசரி அளவான 19 கிலோவை விட மிக
அதிகமாகும்.
கடந்தாண்டு மீனுக்கான சராசரி தனிமனித பயனீடு (எஸ்.எஸ்.ஆர்.) மிக
உயர்வான அளவை அதாவது 90.7 விழுக்காட்டை பதிவு செய்துள்ளது.
மலேசியர்களின் பிரதான அசைவ உணவில் முக்கிய பொருளாக
விளங்குகிறது என மீன்பிடித் துறையின் அந்த அறிக்கை கூறியது.
மலேசிய மீன்பிடித் துறை மற்றும் வோர்ல்ட் பீஷ் அமைப்புக்கும்
இடையிலான 25 ஆண்டுகால வியூக ஒத்துழைப்பின் நிறைவையொட்டி
இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நாட்டின் மீன்பிடித் துறையின் வளர்ச்சியை உறுதி செய்வதில் வியூக
பங்காளி என்ற முறையில் வோர்ல்ட் பீஷ் முக்கியப் பங்கினை
ஆற்றுகிறது என்று அத்துறை தெரிவித்தது.
தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்தி புத்தாக்க நடவடிக்கைகளுக்கு
புத்துயிரூட்டுவதன் மூலம் கடல்சார் உணவு உற்பத்தி துறையில்
மலேசியாவை முன்னணி இடத்திற்கு கொண்டு வருவதில் இந்த
ஒத்துழைப்பு பெரிதும் துணை புரிந்துள்ளது.


