சியோல், ஜூன் 3 - புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு தென் கொரியாவில் இன்று வாக்களிப்பு நடந்து வருகிறது.
புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடி தீர்க்கப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முன்னாள் அதிபர் யுன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துப் போட்டியிடும் லீஜா யுங், எளிதாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 14,295 வாக்குச்சாவடிகளில் காலை மணி 6க்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு மணி 8-க்கு நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெற்றி பெறும் வேட்பாளரின் பெயர் நள்ளிரவில் அறிவிக்கப்படும். மேலும், அவர் நாளை உடனடியாக அதிபராகப் பதவியேற்பார்.
பெர்னாமா


