குவானாஹூவாடோ, ஜூன் 3 - கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மத்திய மெக்சிகோவில் உள்ள போதைப்பித்தர்கள் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.
மேலும், மெக்சிகோ சிட்டியில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைவரும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
--பெர்னாமா


