ஷா ஆலம், ஜூன் 3- புக்கிட் காசிங் தொகுதி ஏற்பாட்டில் இலவச சட்ட
ஆலோசகச் சேவை ஒவ்வொரு மாதத்தின் முதலாவது புதன்கிழமை
மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 ணி வரை தொகுதி சேவை
மையத்தில் நடைபெறுகிறது.
பொது மக்கள் எதிர்நோக்கும் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில்
உதவும் நோக்கில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் இந்த
பயனுள்ள திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
உங்களுக்கு சட்ட உதவி தேவையா? நாங்கள் உதவத் தயாராக
இருக்கிறோம். இது முற்றிலும் இலவசம். உங்கள் சட்டச் சிக்கல்
தொடர்பான பிரச்சினைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள உடனடியாக
எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். இந்த தகவலை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் பத்து லட்சம்
வெள்ளி ஒதுக்கப்படுவதாக மாநில அரசு கடந்த 2022ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. இத்தகைய சட்ட உதவி மையத்தை
நிறுவிய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.
கடந்தாண்டு தொடங்கி ஷரியா, குடும்ப விவகாரங்கள் மற்றும்
வேலையிட்டப் பிரச்சனைக்கும் இந்த சட்ட உதவித் திட்டத்தை மாநில
அரசு விரிவுபடுத்தியது.


