அரசாங்கம் பரிசீலனைக்கான நிபந்தனைகளை கோடிட்டுக் காட்டியிருந்தாலும் முன்மொழியப்பட்ட ஒவ்வொரு வேட்பாளரையும் ஆட்சித் தலைமை மறு மதிப்பீடு செய்யும்.
என் பார்வையில், நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு சேவை செய்தவர்கள் அல்லது நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் பலர் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில்லை என அவர் குறிப்பிட்டார்.
விருதுகளுக்காக பரிந்துரை செய்யும் தரப்பினர் இருந்தாலும் நான் அவர்களை பொருட்படுத்த மாட்டேன். டத்தோ மற்றும் டான் ஸ்ரீ விருதுகள் விற்பனைக்கு அல்ல.
உங்களிடம் நிறைய பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள். ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் கூறினார்.
இதன் அடிப்படையில், இன்று விருது பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளுக்காக பாராட்டப்படவும் பெருமைப்படவும் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பேரரசரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான விருதளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார். இந்த விழாவில் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஸாரித் சோபியாவும் கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி ஃபாட்சில் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


