கோலாலம்பூர், ஜூன் 2- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உயரிய விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற 104 பேரில் தேசிய சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது டுசுக்கி மொக்தார் முதலிடம் பெறுகிறார்.
ஐம்பத்தெட்டு வயதான முகமது டுசுக்கிக்கு டான்ஸ்ரீ அந்தஸ்தை தாங்கி வரும் டர்ஜா பங்லிமா மங்கு நெகாரா (பி.எம்.என்.) விருது வழங்கப்பட்டது.
ஆயுதப்படைகளின் தளபதி டான்ஸ்ரீ முகமது நிஸாம் ஜாபர், மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா முகமது ஹஷிம், கடற்படைத் தளபதி டான்ஸ்ரீ ஜூல்ஹேல்மி இத்னாய்ன், தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை ஆகியோரும் பி.எம்.என். விருது பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே, டத்தோ அந்தஸ்து கொண்ட டர்ஜா பங்லிமா ஜாசா நெகாரா விருதை (பி.ஜே.என்.) பிரதமர் துறையின் முதன்மை துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் சுக்கோர் முகமது, சட்டத் துறையின் சட்டப்பிரிவுத் தலைவர் டத்தோ டோனால்ட் ஜோசப் பிரக்ளின், தேசிய கணக்காய்வாளர் நோர்யாத்தி அகமது உள்ளிட பேர் பெற்றுள்ளனர்.
எட்டு பிரமுகர்களக்கு ஜே.எம்.என். எனப்படும் டர்ஜா ஜோஹான் மங்கு நெகாரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்றவர்களில் இலக்கவியல் அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (இலக்கவியல் மேம்பாடு) மா. சிவனேசன் மாரிமுத்து முத்தையாவும் ஒருவராவார்.
டர்ஜா ஜோஹான் செத்தியா மக்கோத்தா (ஜே.எஸ்.எம்.) விருதை நால்வர் பெற்றுள்ளனர். மேலும் ஐவருக்கு ஜே.எஸ்.டி. எனப்படும் டர்ஜா ஜோஹான் செத்தியா டிராஜா விருது வழங்கப்பட்டுள்ளது.
பிந்தாங் கெசாத்ரியா மங்கு நெகாரா (கே.எம்.என்.) விருதை 16 பேரும் பிந்தாங் கெசாத்ரியா செய்தியா விருதை (கே.எஸ்.டி.) இருவரும் பெற்றுள்ளனர்.
இது தவிர 17 பேருக்கு பிந்தாங் அஹ்லி மங்கு நெகாரா விருதும் 116 பேருக்கு பட்டங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.


