கோத்த பாரு, ஜூன் 1- கடந்த மே 17 மாதம் பாச்சோக், பெரிஸ் குபூர் பெசாரில் ஸ்பா உரிமையாளர் மீது எரிதிராவகத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு நபர்கள் தேவைப்பட்டால் விசாரணைக்கு உதவ மீண்டும் அழைக்கப்படலாம்.
முப்பத்தெட்டு வயதுடைய பெண்ணும் 45 வயது ஆடவரும் மே 28 ஆம் தேதி போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக பாச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.
மாநிலத்தில் இன்னும் மறைந்திருப்பதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபரைக் கண்டுபிடிப்பது உட்பட மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட எரிதிராவகம் என்று நம்பப்படும் திரவம் குறித்து இசாயன மற்றும் தடயவியல் ஆய்வகத் துறையிடமிருந்து காவல்துறைக்கு முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
கடந்த மே 17 ஆம் தேதி தாவாங், பெரிஸ் குபூர் பெசாரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி அருகே ஒரு பெண் வர்த்தகர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமிலம் என்று நம்பப்படும் திரவத்தை வீசினார்.
இத்தாக்குதலில் தோள், முதுகு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்களுக்குள்ளான பாதிக்கப்பட்டவர் தற்போது குபாங் கிரியான், மலேசியா அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார்.


