கோலாலம்பூர், ஜூன் 1- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் அரச மலேசிய ஆகாயப்படையின் 67 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அனைத்து வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
நாட்டின் வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அரச மலேசிய ஆகாயப்படை உறுப்பினர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு மலேசிய ஆயுதப் படைகளின் (ஏ.டி.எம்.) உச்ச தளபதி என்ற முறையில் சுல்தான் இப்ராஹிம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
நமது அன்பான தாய்நாட்டிற்காக அதன் ஆணையை நிறைவேற்றுவதில் அரச மலேசிய ஆகாயப்படை தொடர்ந்து முன்னேற்றகரமான, சிறந்த மற்றும் மதிக்கப்படும் அமைப்பாக விளங்க அல்லாஹ்வின் பாதுகாப்பு மற்றும் அருளின் கீழ் எப்போதும் இருக்கட்டும்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் வழியாக இன்று வழங்கிய வாழ்த்துச் செய்தியில் மாட்சிமை தங்கிய பேரரசர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச மலேசிய ஆகாயப படையின் 67வது ஆண்டு விழா 'வான் ஆற்றல் , தேசிய இறையாண்மையின் அரண்' என்ற கருப்பொருளில் கொண்ட்டப்படுகிறது.


