NATIONAL

தெங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸ்சின் விண்ணப்பத்தைப் இன்னும் பெறவில்லை, ஒற்றுமை அரசாங்கத்தின்  உணர்வுகளை கெஅடிலான் மதிக்கும்.

31 மே 2025, 3:47 PM
தெங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸ்சின் விண்ணப்பத்தைப் இன்னும் பெறவில்லை, ஒற்றுமை அரசாங்கத்தின்  உணர்வுகளை கெஅடிலான் மதிக்கும்.

ஷா ஆலம், மே 31: மக்கள் நீதிக் கட்சி (KEADILAN) இதுவரை கட்சியில் சேர செனட்டர் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தையும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

அனைத்து  உறுப்பினர் விண்ணப்பங்களும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன என்றும், மத்திய தலைமைக் குழு (MPP) கூட்டத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க படுவதற்கு முன்பு வழக்கமான நடைமுறைகளின்படி செயலாக்கப்படும் என்றும் அதன் பொதுச்செயலாளர் டாக்டர் ஃபுசியா சலே கூறினார்.

"ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள நண்பர்களின் கருத்துக்கள் மற்றும் அடிமட்ட மக்களின் கருத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு கண்ணோட்டங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு ஒவ்வொரு விண்ணப்பமும் சரியான முறையில் பரிசீலிக்கப்படும்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று அம்னோவில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த பின்னர் கெஅடிலானில் சேருவதற்கான தனது விருப்பத்தை சுட்டிக்காட்டிய தெங்கு ஸப்ருலின் சமூக ஊடக பதிவைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.

சுய பிரதிபலிப்பு மற்றும் பல்வேறு காரணிகள், பொருந்தக்கூடிய தன்மை மற்றும் பொருத்தத்தின் அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், டாக்டர் ஃபுசியா விரைவில் தெங்கு ஸப்ருல் புனித யாத்திரைக்கு செல்ல உள்ளார் என்றும், அதை பாதுகாப்பாக மேற்கொண்டு திரும்புவதற்காகவும், அவருக்கு இறைவன் ஆசீர்வதிக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.