மலாக்கா, மே 30 - நேற்று காலை மலாக்காவில் 3 வாகனங்களை உட்படுத்திய ஒரு கோர சாலை விபத்தில், 462 பேக்கேட்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
காலை சுமார் 8 மணிக்கு AMJ நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள், கார், லாரி ஆகிய மூன்றும் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டது.
22 வயது மோட்டார் சைக்கிளோட்டி கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் லாரியைய மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக மலாக்கா காவல்துறை தலைவர் ட்சுல்காய்ரி முக்தார் கூறினார்.
இச்சம்பவ இடத்தில், மோட்டார் சைக்கிளோட்டிக்குச் சொந்தமான என நம்பப்படும் போதைப்பொருட்கள் கிடைத்துள்ளன. 450 பேக்கேட்டுகளில் 688.81 கிராம் ஹெரோய்ன் வகை போதைப்பொருளும், 12 பேக்கேட்டுகளில் 13.41 கிராம் எடையிலான methamphetamine வகை போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது, விசாரணைத் தொடருவதாக ட்சுல்காய்ரி சொன்னார்.


