சியோல், மே 30 - எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தென் கொரியவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபர், 1980-ஆம் ஆண்டுகளில் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு மாறிய தென் கொரியாவின் நற்பெயரை தற்காப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பதவிலிருந்த அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபர் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது, அமெரிக்க வர்த்தகக் கொள்கையை நிர்வகிப்பது மற்றும் வட கொரியாவை கையாள்வது ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தை உயர்த்த நிதிக் கொள்கைகளை ஆதரிப்பதோடு, யூன் உட்பட அவருக்கு துணை நிற்பவர்களை நீதிக்கு முன் கொண்டு வருவதில் முக்கிய நபராக இருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங், தேர்தலில் 49 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து, லீ ஜே மியுங்கை எதிர்த்து போட்டியிடும் மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் கிம் மூன் சோ 35 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், புதிய சீர்திருத்தக் கட்சியைப் பிரதிநிதித்து லீ ஜூன் சியோவும் இந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா


