கோலாலம்பூர், மே 30 - பெஸ்த்தா கெயமாத்தான் மற்றும் காவாய் திருநாளைக் கொண்டாடும் மலேசியர்களுக்கு, மாமன்னரும் அவரது துணைவியார் ராஜா சாரிட் சோஃபியாவும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
கடாசான் மக்களால் கொண்டாடப்படும் பெஸ்த்தா கெயமாத்தான் மற்றும் காவாய் திருநாள், நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் வளமான பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிப்பதாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இத்திருநாளின் மூலம் மலேசியர்களின் கலாச்சார பன்முகத்தன்மை தெளிவாக வெளிப்படுவதாக, சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் எனும் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மாமன்னர் குறிப்பிட்டிருந்தார்.
அறுவடை காலம் முடிந்த பிறகு, விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று சபாவில் கெயமாத்தான் பண்டிகையும், நாளை சரவாக்கில் காவாய் திருநாளும் கொண்டாடப்படுகின்றது.
பெர்னாமா


