தைப்பிங், மே 30 - நேற்றிரவு பேராக், கமுந்திங் நோக்கிச் செல்லும் சாலையில் விரைவுப் பேருந்து திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், தீயணைப்பு மீட்புத் துறை வருவதற்குள் பேருந்திலிருந்த 28 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தியதாகப் பேராக் தீயணைப்பு மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரோட்சி நோர் அமாட் கூறினார்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.


