டென்னசி, மே 30 - அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள மெக்டானல்ட் டிரைவ்-துரு உணவகத்தில் உணவு ஆர்டர் செய்த தம்பதிக்கு 3 பைகளில் ரொக்கப் பணம் கிடைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.
டிரைவ்-துருவில் ஆர்டர் செய்த உணவுகள் பொட்டலங்களில் தரப்பட்டதும் அவர்கள் நேராக வீடு திரும்பினர். வீட்டில் பொட்டலங்களைத் திறந்து பார்த்த போது ஆயிரக்கணக்கான டாலர் ரொக்கம் அடங்கிய 3 பைகள் அதிலிருந்தன.
அது டிரைவ்-துரு உணவகத்தின் முதல் நாள் வியாபாரப் பணமாகும். வங்கியில் போடப்படுவதற்காக வைத்திருந்த அப்பணத்தை, டிரைவ்-துரு பணியாளர் தவறாக உணவவோடு உணவாக சேர்த்து அந்த தம்பதியிடம் கொடுத்து விட்டார்.
பின்னர், தன் தவற்றை உணர்ந்த அப்பணியாளர் உடனே கிளம்பி அத்தம்பதியின் டிரக்கை துரத்தி அவர்களின் வீட்டை கண்டு பிடித்தார்.
உண்மைமை விளக்கிச் சொன்னதும் அத்தம்பதி பணத்தை முழுவதுமாக ஒப்படைத்தனர். அந்த தம்பதியின் செயலுக்கு மெக்டானல்ட் டிரைவ்-துரு மேலாளர் நன்றியை தெரிவித்தார்.


